Tuesday, August 14, 2012

இடைவெளி


சாக்கடைக்கிடையில் பூக்கடை
வாழ்க்கைக்கும் ,வறுமைக்கும்
ஓர்இடைவெளி

-சீனி

Sunday, August 12, 2012

விடையறியா தொடர்தல்...



நிலவென்று பின்தொடர்ந்தால்
மின்னலாய் மறைகிறாய்...
இடியாகத் தொடர்ந்தாலும்
விடையே கிடைப்பதில்லை...
காற்றுக்குப் பின்வரும்
அடைமழையைப் போலுன்னை
அடையும்வரைப் பின்தொடர்வேன்
அகவை முடியும் வரை...

-சீனி

திசை காட்டும் விழிகள்



நீ வரும் திசையை மட்டும் காட்டும்
திசைமானி - என் கண்கள்!

-சீனி

சகாராவின் தாகம்



உன் சிறு புன்னைகைக்குக்
காத்திருக்கும் கோடை - நான்
உனக்கோ நான் சகாரா...

-சீனி